Nthg

ஒளி மாசு (Light pollution) என்பது தேவையற்ற அல்லது அதிகப்படியான செயற்கை விளக்குகளிலிருந்து வெளிப்படும் ஒளியாகும்.[1][2] விளக்கமாகக் கூறுவதானால் ஒளி மாசுபாடு என்பது பகல் அல்லது இரவின் போது, ​​மோசமாகப் பயன்படுத்தப்படும் ஒளி மூலங்களின் விளைவுகளைக் குறிக்கிறது.[3]

இந்த வகை மாசுபாடு பகல் முழுவதும் இருக்கக்கூடும் என்றாலும், இரவு வானத்தின் இருளில் தாக்கம் செலுத்துகின்றன. உலகின் 83 விழுக்காடு மக்கள் ஒளி மாசுபட்ட வானத்தின் கீழ் வாழ்கிறார்கள் என்றும், உலகின் 23 சதவிகித நிலப்பரப்பு ஒளிரும் வானத்தால் (Skyglow) பாதிக்கப்படுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[4][5] உலகில் செயற்கை வெளிச்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.[6] நகரமயமாக்கலின் பெரும் பக்க விளைவான ஒளி மாசு ஆரோக்கியத்தில் சமரசம் செய்வதாகவும், சுற்றுச்சூழல் சமன்பாட்டைச் சீர்குலைப்பதாகவும், அழகியல் சூழலைக் கெடுப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. நகர்ப்புறங்கள் அதிக ஆபத்தில் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.[7] உலகளவில், ஒளி மாசு 1992 முதல் 2017 வரை குறைந்தது 49% அதிகரித்துள்ளது.[8]

செயற்கை ஒளியைத் தேவையற்ற அளவில் பயன்படுத்தப்படுவதால் ஒளி மாசுபாடு ஏற்படுகிறது. ஒளி மாசுபாட்டின் வகைகளில் ஒளி அத்துமீறல், அதீத வெளிச்சம், கூசும் ஒளி, ஒளி ஒழுங்கீனம், ஒளிரும் வானம் ஆகியவை அடங்கும். தேவையற்ற செயற்கை ஒளியானது பெரும்பாலும் இந்த வகைகளில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றில் அடங்கும்.[9][10]

ஒளி மாசுபாட்டிற்கான தீர்வுகள் பெரும்பாலும் ஒளி விளக்குகளைச் சரிசெய்தல் அல்லது மிகவும் பொருத்தமான ஒளி விளக்குகளைப் பயன்படுத்துவது போன்ற எளிதான படிகளாகும். சட்டமியற்றி மாற்றத்துக்குத் தூண்டும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அதிக முயற்சிகளைக் மேற்கொண்டு இதைத் தீர்வு காண முடியும்.[11]

வரையறைகள்

ஒளி மாசு என்பது இருண்ட சூழல்களில் மாந்தரால் உருவாக்கப்பட்ட செயற்கை ஒளி இருப்பது ஆகும்.[12][13][14][15]

இந்தச் சொல் பொதுவாக வெளிப்புறச் சூழல் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் உட்புறத்தில் உள்ள செயற்கை ஒளியைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் பாதகமான விளைவுகள் பல என்றாலும்; அவற்றில் சில இன்னும் அறியப்படாமல் உள்ளன. ஒளி மாசுபாடு நகர்ப்புற மக்களின் இரவு வானின் நட்சத்திர ஒளியை மங்கச் செய்கிறது, வானியல் ஆய்வுக்கூடங்களில் ஆய்வு மேற்கொள்வதற்கு இடைஞ்சலை ஏற்படுத்துகிறது.[16] மேலும் மற்ற மாசுபாடுகளைப் போலவே, சூழல் மண்டலத்தையும் சீர்குலைக்கிறது. இதனால் மோசமான ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.[17][18] ஒளி மாசுபாடு என்பது தொழில்துறை நாகரிகத்தின் பக்க விளைவாகும். தொழில்துறை நாகரீகத்தின் ஒரு பகுதியான கட்டடங்களின் வெளிப்புற, உட்புற விளக்குகள், விளம்பரம், திறந்த வெளிப்பகுதி விளக்குகள் (வாகன நிறுத்துமிடங்கள் போன்றவை), அலுவலகங்கள், தொழிற்சாலைகள், தெருவிளக்குகள், ஒளிரும் விளையாட்டு அரங்கங்கள் ஆகியவை அடங்கும். வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களில் அதிகத் தொழில்மயமாக்கப்பட்ட, அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளிலும், மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் தெகுரான், கெய்ரோ போன்ற முக்கிய நகரங்களிலும் இது மிகவும் கடுமையாக உள்ளது. ஒளி மாசுபாட்டின் விளைவுகளால் ஏற்படும் தீங்கு குறித்த விழிப்புணர்வு 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கியது. ஆனால் அதன் விளைவுகளைச் சரி செய்வதற்கான முயற்சிகள் 1950 கள் வரை தொடங்கவில்லை.[19] 1980களில் சர்வதேச இருண்ட வானச் சங்கம் (ஐடிஏ) நிறுவப்பட்டதன் மூலம் உலகளாவிய இருண்ட-வான இயக்கம் உருவானது. உலகளவில் பல நாடுகளில் இதுபோன்ற கல்வி மற்றும் விழிப்புணர்வு ஊட்டும் நிறுவனங்கள் இப்போது உள்ளன.

99% ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் உள்ளிட்ட சுமார் 83% மக்கள், இயற்கையான இருளை விட 10% க்கும் கூடுதலான பிரகாசம் கொண்ட ஒளி மாசுபட்ட வானத்தின் கீழ் வாழ்கின்றனர். 80% வட அமெரிக்கர்களால் பால் வழி மண்டலத்தைப் பார்க்க முடியாது.[20]

வகைகள்

ஒளி அத்துமீறல்

தேவையற்ற ஒளி ஒருவரின் வாழிடத்தில் நுழையும் போது ஒளி அத்துமீறல் ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, பக்கத்துவீட்டாரின் வேலியைத் தாண்டி அடுத்த வீட்டின் மீது பிரகாசமான ஒளி பாய்வதன் மூலம் ஒளி அத்துமீறல் நிகழ்கிறது. ஒருவரின் வீட்டின் சாளரத்துக்கு வெளியில் இருந்து பிரகாசமான வெளிச்சம் நுழையும் போது பொதுவாக ஒளி அத்துமீறல் பிரச்சனை ஏற்படுகிறது. இது தூக்கமின்மை போன்ற சிக்கல்களை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவின் பல நகரங்கள் தங்கள் குடிமக்களை ஒளி அத்துமீறலிலிருந்து பாதுகாக்க வெளிப்புற விளக்குகளுக்கான கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளன. அவர்களுக்கு உதவ, சர்வதேச இருள் வான் சங்கம் மாதிரி விளக்கு ஒழுங்குமுறைகளை உருவாக்கியுள்ளது.[21]

சர்வதேச இருள் வான் சங்கம் என்பது நட்சத்திரங்களை நன்கு காண இயலாதவாறு வெளிப்படும் இரவு வெளிச்சத்தைக் குறைக்கத் தொடங்கப்பட்டது. (கீழே உள்ள ஒளிரும் வானம் பகுதியைப் பார்க்கவும்).

Phoenix city lights viewed from a distance

பீனிக்ஸ் நகரம், 55 மைல் (89 கிமீ) தொலைவில் உள்ள சர்ப்ரைஸ், அரிசோனாவில் இருந்து பார்க்கும்போது

அதீத வெளிச்சம்

ஓர் அலுவலகக் கட்டடம் மேல்நோக்கிப் பிரகாசிக்கும் உயர் அழுத்த சோடியம் (HPS) விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டுள்ளது. அதீத வெளிச்சம் வானத்திலும் அண்டை அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கும் செல்கிறது, இதனால் ஒளி மாசு ஏற்படுகிறது.

அதீத வெளிச்சம் என்பது தேவைப்படுவதை விட அதிக்கப்படியான ஒளியைப் பயன்படுத்துவது ஆகும்.[10]

அனைத்து வளர்ந்த நாடுகளிலும் ஒளி பயன்பாடு அதிகமாக இல்லை. வளர்ந்த நாடுகளில் ஒளியைப் பயன்படுத்துவதில் பெரிய வேறுபாடுகள் உள்ளன. ஜெர்மன் நகரங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க நகரங்கள் ஒரு நபருக்கு மூன்று முதல் ஐந்து மடங்கு அதிக ஒளியை விண்வெளிக்கு அனுப்புகின்றன.[22]

அதீத வெளிச்சம் பல காரணிகளிலிருந்து உருவாகிறது

  • தவறான வடிவமைப்பு, தேவையானதை விட அதிக அளவிலான ஒளியைக் குவித்தலால்;[23]
  • தவறாக பொருத்துதல்கள் அல்லது ஒளி விளக்குகளின் தவறான தேர்வு, அவை தேவைப்படும் பகுதிகளுக்கு ஒளியை செலுத்தாத நிலை;[23]
  • ஒளிக்குத் தேவையானதை விட அதிக ஆற்றலைப் பயன்படுத்தும் வன்பொருளை முறையற்று தேர்வு செய்தல்;
  • விளக்கு அமைப்புகளைத் திறமையாக பயன்படுத்தக் கட்டட மேலாளர்களுக்கும், குடியிருப்பாளர்களுக்கும் போதுமான பயிற்சியின்மை;

Reviews

100 %

User Score

1 ratings
Rate This

Sharing

Leave your comment

Your email address will not be published. Required fields are marked *