Hh
சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று போராட்டம் நடைபெற்றதால் 2018 ம் ஆண்டு இடஒதுக்கீடு நீக்கப்பட்டது.
அவாமி லீக் (ஷேக் ஹசீனா கட்சி) தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 30% இட ஒதுக்கீட்டை அறிவித்தது. இதற்குத்தான் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் பலர் கொல்லப்பட்டனர், போராட்டம் வன்முறையாக மாறியது.
பின்னர் உச்சநீதிமன்றம் 30% லிருந்து 5% மாற்றிய பிறகு போராட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது ஆனால், இடைவெளிக்குப் பிறகு ஷேக் ஹசீனா பதவி விலகப் போராட்டம் துவங்கியது.
மாறிய போராட்டம்
ஒரே நாளில் 90+ நபர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர். பின்னர் இராணுவம் 45 நிமிடங்கள் கால அவகாசம் கொடுத்து ஷேக் ஹசீனாவை வெளியேறச்சொன்னது.
இதன் பிறகு ஷேக் ஹசீனா அவரது தங்கையுடன் இந்தியாவில் தற்காலிகமாகத் தஞ்சம் புகுந்தார்.
இட ஒதுக்கீட்டுக்காக ஆரம்பித்த போராட்டம், பின்னர் இந்துக்கள் மீதான வன்முறையாக மாற்றம் பெற்றது.
இந்துக்களைக் கொலை செய்வது, பெண்களைப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்குவது, கடத்துவது, வீட்டை எரிப்பது, பொருட்களைத் திருடுவது, சூறையாடுவது என்று மாறியது.
இதுவரையான தகவல்களைப் பலரும் செய்திகளில் அறிந்து இருப்பீர்கள் ஆனால், இதோடு சில தகவல்களை இக்கட்டுரையில் காண்போம்.
சர்வதேச அரசியல்
பங்களாதேஷ் போராட்டம் என்பது வெறும் மாணவர் போராட்டம் மட்டுமே அல்ல, அதில் ஏராளமான சர்வதேச அரசியலும் உள்ளது.
கலவரம், வன்முறையின் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுபவர்கள் நால்வர்.
அமெரிக்கா CIA, சீனா, பாகிஸ்தான் ISI மற்றும் Deep State.
அமெரிக்காவுக்கு இப்பகுதியில் சீனாவுக்கு செக் வைக்க, சீனாவின் பலத்தைக் கட்டுப்படுத்த இங்கே Military Base தேவை. அது பங்களாதேஷில் தான் முடியும்.
சீனாவுக்கு இங்குள்ள துறைமுகம் தேவை. காரணம், இந்தியாவை முத்து மாலை வடிவமைப்பில் கட்டுப்பாட்டில் எடுக்க முயல்கிறது.
எனவே, இலங்கை அம்பன் தோட்டா துறைமுகம், பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு என்று அனைத்துப் பக்கமும் வளைத்துக் கப்பல் வழியைக் கட்டுப்பாட்டில் எடுக்க முயல்கிறது.
பாகிஸ்தானுக்கு பங்களாதேஷ் மீது வெறுப்பு. காரணம், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வந்தது. அதைவிட பொருளாதாரத்தில் பாகிஸ்தானை விட சிறப்பாக இருப்பது.
தாங்கள் சொல்வதைக் கேட்கும் ஆட்சியரைத் தான் Deep State ஆதரிக்கும் என்று முன்பு கூறியுள்ளேன்.
ஷேக் ஹசீனா அதற்கு ஒத்துழைக்கவில்லை என்பதால், தங்களுடைய NGO க்கள் மற்றும் பணத்துக்கு விலை போனவர்களை வைத்து பிரச்சனையை ஏற்படுத்தும்.
ஷேக் ஹசீனா
15 வருடங்களாக ஆட்சியில் இருந்தவர். கடந்த பொதுத்தேர்தலில் சர்ச்சைக்குரிய முறையில் வெற்றி பெற்றார்.
ஷேக் ஹசீனா நல்லவரா கெட்டவரா என்பது பற்றி நமக்கு அவசியமில்லை. தேவையானதை மட்டும் பார்ப்போம்.
ஷேக் ஹசீனா கிட்டத்தட்ட வலது சாரி சிந்தனையில் நாட்டின் வளர்ச்சியில் மிகவும் அக்கறை கொண்டு, GDP யை சிறப்பான உயரத்துக்கு கொண்டு சென்றார்.
ராகுல் காந்தி உட்படக் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கூட இந்தியாவை விட பங்களாதேஷ் பொருளாதாரம் (GDP / Per Capita) சிறப்பாக உள்ளது என்று (அரசியலுக்காக) பாராட்டினார்கள்.
பங்களாதேஷ் முஸ்லீம் அடிப்படை வாதிகளுக்கு ஷேக் ஹசீனாவை பிடிக்காது, தொடர்ந்து குற்றச்சாட்டு வைப்பார்கள், எதிராகச் செயல்படுவார்கள்.
சில மாதங்களுக்கு முன் சாலையில் நமாஸ் செய்து பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்திய அடிப்படைவாத முஸ்லிம்களை காவல்துறை அப்புறப்படுத்தியது.
தற்போது இந்துக்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதால், ஷேக் ஹசீனா காலத்தில் நடக்கவில்லையென்பதல்ல. கட்டாய மதமாற்றம் உட்படப் பலவும் நடந்தது.
செக்குலர் இந்து
இந்துக்களுக்கு எவ்வளவு பட்டாலும், செக்குலர் என்பது பெரும்பான்மை இந்துக்கள் இருக்கும் வரையே என்பதை புரிந்து கொள்ள மாட்டார்கள்.
பங்களாதேஷ் போராட்டம் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடந்த போது அங்குள்ள முஸ்லிம்களுடன் இந்துக்களும் இணைந்து போராட்டம் நடத்தினார்கள்.
Aaariya Bhowmik
Aaariya Bhowmik என்ற பங்களாதேஷ் இந்துப்பெண், ‘நான் ஒரு இந்து, பங்களாதேஷில் உள்ள அனைத்து மதத்தினரும் என்னைப் பாதுகாப்பார்கள்.
நாங்கள் பங்களாதேஷை உருவாக்கினோம். ஒற்றுமையா இருப்போம்‘ என்று கருத்திட்டார்.
கருத்து வெளியிட்ட அடுத்த நாள், ‘என்னைக் காப்பாற்றுங்கள், நான் ஒரு இந்து என்பதால், என்னைத் தாக்குகிறார்களா? நானும் போராட்டத்தில் பங்கு பெற்றேன்.
இது போன்ற தாக்குதல் நியாயமற்ற செயல்‘ என்று புலம்பித் தினமும் ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டு உள்ளார்.
மதம் பார்க்காமல் பலருக்கும் உணவளித்து வந்த ISKON கோவிலையும், பிரபலமான காளி கோவிலையும் சேதப்படுத்தி விட்டார்கள்.
பிரச்சனை பெரிதானதால், கோவிலுக்கு இராணுவம் பாதுகாப்பளித்து வருகிறது.
ராகுல் ஆனந்த்
ராகுல் ஆனந்த் என்ற இசையமைப்பாளர், ஷேக் ஹசீனாவை எதிர்த்துக் குரல் கொடுத்து, போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்த செக்குலர் இந்து.
இவரது வீட்டையும், இவர் பொக்கிஷமாகப் பாதுகாத்த 3000 இசைக்கருவிகளையும் எரித்துச் சாம்பலாக்கி விட்டனர்.
இதே போன்று கிரிக்கெட்டில் பங்களாதேஷுக்காக விளையாடிய இந்து வீரர் Liton Das வீட்டை எரித்து விட்டார்கள். இது போன்று கூற ஏராளமான தகவல்கள் உள்ளது.
பிரச்சனை என்று வந்தால், அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு மற்றவர்கள் என்றுமே காஃபிர் தான்.
இந்துக்களுக்கு எதிரான இந்திய அரசியல்
முஸ்லீம் அடிப்படைவாதிகள் நிரம்பிய ஒரு நாடு பங்களாதேஷ். இங்கே எப்போது வேண்டும் என்றாலும் இது போன்ற இந்துக்கள் மீதான கலவரத்துக்கு வாய்ப்புள்ளது.
எனவே, இங்குள்ள இந்துக்கள் இந்தியா அல்லது வேறு நாடுகளுக்கு இடம் பெயர்வதே நல்லது.
பாலஸ்தீன முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுத்த ஒருவர் கூடப் பங்களாதேஷ் இந்துக்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை. தமிழக அரசியல்வாதிகள், ஊடகங்கள் உட்பட அனைவரும் இதைப் பற்றிப் பேச்சே இல்லை.
ஒரு தமிழகச் சேனல் கூட இதை விவாதிக்கவில்லை, விவாதிக்க மாட்டார்கள்.
ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவை கொண்டாடுவதை விட, தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் Arshad பற்றிப் புகழ்ந்து கட்டுரை எழுதுபவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?!
பாலஸ்தீனர்களுக்காகக் குரல் கொடுத்த ராகுல் உட்பட்ட காங்கிரஸ் மற்றும் INDI கூட்டணி தலைவர்கள் ஒருவர் கூட இந்துக்களுக்காக குரல் கொடுக்கவில்லை.
ஆனால், ராகுல் உட்பட ஐந்து காங்கிரஸ் MP க்களுக்கு மாம்பழம் அனுப்பி மகிழ்ச்சியைப் பாகிஸ்தான் பகிர்ந்து கொள்கிறது.
அமெரிக்கா சீனா
அமெரிக்காவைச் சார்ந்த ஒருவர் தேர்தலுக்காக DEAL பேசியதாகவும், அதற்கு ஷேக் ஹசீனா ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
சீனா பயணம் சென்ற ஷேக் ஹசீனாவுக்கு அங்கே முக்கியத்துவம் கொடுக்கப்படாததோடு, அவர் எதிர்பார்த்த உதவித்தொகையும் கிடைக்கவில்லை.
இதனால், கடுப்பாகி தனது பயணத்தை ஒரு நாள் முன்னதாகவே முடித்துக்கொண்டு பங்களாதேஷ் திரும்பி வந்து இந்தியாக்கு துறைமுக வாய்ப்பைக் கொடுத்தார்.
இத்துறைமுக வாய்ப்பு இந்தியாக்கு சரக்கு போக்குவரத்துக்குப் பல்வேறு வகையில் மிகப்பெரிய உதவியாகவும் அமைந்தது.
தற்போது இக்கலவரம் நடந்து ஷேக் ஹசீனா துரத்தப்பட்டுள்ளார்.
சிறையிலிருந்த எதிர்க்கட்சித்தலைவர் Khaleda Zia விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு அமெரிக்க, சீன, பாகிஸ்தான் ஆதரவாளர். இந்து, இந்திய எதிர்ப்பாளர்.
மேற்கூறிய புள்ளிகளை இணைத்தால், இதன் பின்னணியில் உள்ள சர்வதேச அரசியல் புரியும்.
இந்தியா